×

காய் நகர்த்தும் பாஜ: அதிர்ச்சியில் செங்ஸ்

கோபி: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் கோபி தொகுதியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமீபத்தில் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்த வரை அவர் மட்டுமே வேட்பாளர் என்ற எழுதப்படாத விதியாக இருந்து வந்தது.

ஆனால் அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் மோதல் இருந்து வந்ததால் இந்த முறை அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பில் செங்கோட்டையன் பெயர் இருக்காது என்ற பேச்சு பரவலாக இருந்து வந்த நிலையில் தான் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். இதன் மூலம் மீண்டும் கோபி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு செங்கோட்டையனுக்கு உருவாகி உள்ளது. ஆனால் இந்த முறை பாஜ கோபி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ வெற்றி பெற்றதை தொடர்ந்து, இம்முறை கோபி தொகுதியையும் கூடுதலாக கேட்க பாஜவினர் முடிவு செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலகி விட்டதால், அதிமுக சார்பில் போட்டியிட சரியான வேட்பாளர் இல்லை என்றும், எனவே கூட்டணி கட்சியான பாஜவிற்கு தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் வலியுறுத்த பாஜ முடிவு செய்துள்ளது. பாஜவினரின் இந்த நடவடிக்கை அதிமுகவினரை மட்டுமின்றி, செங்கோட்டையனையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : BJP ,Gopi ,Erode district ,Sengottaiyan ,AIADMK ,Thaweka ,AIADMK… ,
× RELATED கிழக்கு திசை காற்று அலை காரணமாக இன்று 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு