- வாக்காளர் தினம்
- திருப்போரூர் அரசு பள்ளி
- Tiruporur
- தேசிய வாக்காளர் தினம்
- இந்திய தேர்தல் ஆணையம்
- திருப்போரூர்…
திருப்போரூர், ஜன.24: திருப்போரூர் அரசு பள்ளியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அனைத்து அரசு பள்ளிகளிலும் தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வாக்காளர் தின உறுதிமொழி ஏற்க இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் தெமீனா கிரானேப் தலைமை தாங்கினார். திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், வாக்காளர் தின உறுதிமொழி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர், மீண்டும் அரசு பள்ளிக்கு வந்து அங்கு ஆசிரியர்கள், வருவாயத்துறை அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அனைவரும் தவறாது வாக்களிப்போம், வாக்களிக்க இலவச பொருட்களையோ பணமோ வாங்க மாட்டோம் என்பது உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.
