நாகர்கோவில்: பேஸ்புக்கில் போலியாக கணக்கு ெதாடங்கி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த இளம்பெண்ணை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசத்துக்கு ஆசைப்பட்டு போலி இணைய தள முகவரியை நம்பி லட்சக்கணக்கில் பணத்ைத இழந்த குமரி மாவட்டத்ைத சேர்ந்த இளைஞர்கள் சிலர் இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் புகார் அளித்தனர். அதன் பேரில், புகார் அளித்த இளைஞர்களிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, சில விபரங்களை சேகரித்தனர். அதன்படி இளைஞர்கள் ஏமாந்த போலி பேஸ்புக் ஐ.டி.யை ரகசியமாக கண்காணித்தனர். எங்கிருந்து எந்த செல்போன் இணைப்பில் இந்த கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. எங்கிருந்து ஆக்டிவ் செய்யப்படுகிறது என்பதை கண்காணித்து, அது தொடர்பான விசாரணையில் இறங்கினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த முகமது ஷாஜகான் என்பவரது மகள் நபிலா பேகம் (27) என்பவர் தான் பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் இளம்பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து, இளைஞர்களை உல்லாசத்துக்கு அழைப்பது போல் லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் தனிப்படை போலீசார் பரமக்குடி விரைந்து, நபிலா பேகத்தை கைது செய்தனர். கைதான நபிலா பேகத்தை நேற்று நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது: பேஸ்புக் ஐ.டி. பயன்படுத்தி ஆபாச சாட்டிங் மற்றும் வயதிற்கு ஏற்ற பெண்கள் தனித்தனியாக ரேட் எனக் குறிப்பிட்டு ஆபாச உரையாடலுக்கும், உடலுறவுக்கும் அழைப்பு விடுத்து வாட்ஸ்அப் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த எண்ணில் பேசும் பெண் ஒருவர் நீங்கள் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கலாம். ஆபாச வீடியோ கால் மற்றும் ஆபாச சேட்டிங் செய்யலாம் என ஆசை வார்த்தை கூறுவார். அதனை நம்பி பலரும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் இளம்பெண் ஒருவரை கைது செய்து உள்ளோம். இளம்பெண்களுடன் வீடியோ கால் செய்ய தனி ரேட், வீடியோ காலில் ஆடையின்றி நிர்வாணமாக நின்று பேச தனி ரேட், ஆபாச சாட்டிங் செய்ய தனி ரேட், உல்லாசமாக இருக்க தனி ரேட் என கூறி பணம் வசூலித்து ஏமாற்றி உள்ளனர் என்றனர்.
