×

பள்ளிக்கு அழைத்து சென்றபோது மொபட் மீது லாரி மோதி தாய், மகள் பரிதாப பலி: தப்பிய டிரைவருக்கு வலை

வேளச்சேரி: பெரும்பாக்கம் சேகரன் நகரை சேர்ந்தவர் புனீஷ் (38). இவரது மனைவி லாவண்யா (35). இவர்கள் இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களின் மகள் இனியா (13), பெரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை லாவண்யா தனது மொபட்டில் மகளை ஏற்றிக்கொண்டு அவர் படிக்கும் பள்ளியில் விடுவதற்காக புறப்பட்டார். பிரபல தனியார் குடியிருப்பு மெயின் ரோட்டில் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, லாவண்யா மொபட் மீது மோதியது.

இதில், இருவரும் கீழே விழுந்தனர். அப்போது லாரி சக்கரம் இருவர் மீதும் ஏறி இறங்கியதில் தாய், மகள் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்த லாரி டிரைவர் தப்பினார். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : Puneesh ,Perumbakkam Sekaran Nagar ,Lavanya ,Iniya ,Perumbakkam ,
× RELATED காதலிக்குமாறு தொந்தரவு செய்த...