×

சென்னையில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேச வாலிபர்கள் கைது

புழல்: செங்குன்றம் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த சிலர், சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் அழிஞ்சிவாக்கத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் தங்கியிருந்த 3 பேரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பாக கேட்டபோது, சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில், வங்கதேசத்தை சேர்ந்த ஜோஹிருல் இஸ்லாம் (36), சஹலால் இஸ்லாம் (26), கைருல் இஸ்லாம் (31) என்பதும், இவர்கள் 3 பேரும் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, உரிய அனுமதியின்றி செங்குன்றம் அடுத்து அழிஞ்சிவாக்கம் பகுதியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து மோசடியாக தயாரிக்கப்பட்ட 3 ஆதார் கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், கைதான 3 பேர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Chennai ,Chengunram ,Azhinjivakkam ,
× RELATED காதலிக்குமாறு தொந்தரவு செய்த...