×

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இப்பெண், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வழி தவறி பம்மல், நல்லதம்பி சாலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளம்பெண் தனியாக வருவதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் (26) என்பவர், அப்பெண்ணிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, உனது வீட்டில் இறக்கி விடுகிறேன், எனக்கூறி தனது ஆட்டோவில் ஏறுமாறு கூறியுள்ளார்.

அதன்படி இளம்பெண், ஆட்டோவில் ஏறிய பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச்சென்ற சக்திவேல், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமிறலில் ஈடுபட்டு, மீண்டும் அப்பெண்ணின் வீட்டின் அருகே இறக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து இளம்பெண், தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* கோயம்பேடு பகுதியை சேர்ந்த 41 வயது பெண், நேற்று முன்தினம் மதுரவாயல் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்றார். புகாரின்பேரில், மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரஜா பத்ரா(24), என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Tags : Pallavaram ,Pammal ,Nallathambi Road ,
× RELATED இயக்குநரை கொன்றது ஏன்? நடிகை பரபரப்பு வாக்குமூலம்