×

குற்றம் பொறுத்தவர் கோயிலுக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

குன்னம், ஜன.23: குற்றம் பொறுத்தவர் கோயில் செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறையில் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சுகந்த குந்தலாம்பிகை உடனுறை குற்றம் பொறுத்தவர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.28ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த சிவன் கோவிலுக்கு ஆடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டு, குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். நடைபெற உள்ள கோயில்கும்பாபிஷேக விழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளதால் மேற்கண்ட சாலையை போர்கால அடிப்படையில் சீரமைத்து தர பக்தர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

 

Tags : Kunnam ,Sugantha Kunthalambigai Udanurai ,Su. Aaduthurai, Kunnam taluk, Perambalur district ,
× RELATED இரூர் சிப்காட்டிற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு