×

திருவிடைமருதூர் அருகே ஊரக மதிப்பீட்டு சிறப்பு முகாம்

திருவிடைமருதூர், ஜன.22: திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் வட்டாரத்தில் ஊரக மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டாரத்திற்கு உட்பட்ட சாத்தனூர் கிராமத்தின் மைய பகுதியில் டாக்டர்.எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின் கீழ் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டை நடத்தினர்.

அப்போது கிராமத்தின் வரைபடம், கால அட்டவணை, பயிர் வகைகள், ஆண் பெண் விகிதம், கிராமத்தின் வளங்கள் மற்றும் கல்வி அறிவு விகிதம் போன்ற வரைபடங்களை மாணவர்கள் வரைந்திருந்தனர். இந்நிகழ்வில், சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

 

Tags : Assessment Special Camp ,Thiruvidaimarudur ,Thiruppanandhal block ,Sathanur village ,Thiruvidaimarudur taluka ,Thanjavur district ,Dr. ,M.S. Swaminathan Agricultural College and Research Institute ,
× RELATED சாத்தூர் அருகே மக்கள் அரங்கம்...