- விவசாயிகள் நல நாள்
- காஞ்சிபுரம்
- கலெக்டர்
- கலாச்செல்வி மோகன்
- மக்கள் நல்லெண்ண மையம்
- காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம்
காஞ்சிபுரம், ஜன.22: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
அரசின் நலத்திட்டங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், தனித்துவ விவசாய அடையாள எண் (டிஜிட்டல் பார்மர் ரிஜிஸ்ரி) வழங்கும் பொருட்டு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை களப்பணியாளர்களை தொடர்புகொண்டு விவசாயிகள் தங்களது ஆதார், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைபேசி மற்றும் கம்பியூட்டர் சிட்டா கொண்டுச்சென்று பதிவு செய்ய வேண்டும். பி.எம். கிசான் திட்டத்தின் 22வது தவணை தொகை பிப்ரவரி மாதம் விடுவிக்கப்பட உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,654 விவசாயிகள் இ-கேஒய்சி மற்றும் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காமலும் உள்ளனர். அடுத்த தவணைத் தொகையினை பெறும் பொருட்டு விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ அல்லது வேளாண் விரிவாக்க மையத்திலோ பி.எம். கிசான் கணக்கினை இ-கேஒய்சி மூலம் புதுப்பிக்க வேண்டும். மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள விவசாயிகள் அப்பணியினை மேற்கொண்டு, பி.எம். கிசான் திட்டத்தின் 22வது தவணை தொகையினை பெற்று பயனடையலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
