×

அடுப்பில் தவறி விழுந்த சிறுமி படுகாயம்

ஊத்தங்கரை, ஜன.21: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை மகனூர்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு ஆகாஷ் என்ற மகனும், நிதர்ஷினி(8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நிதர்ஷினி, திடீரென அருகில் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தவறி விழுந்தார். இதில், உடலில் தீப்பற்றியது. வலியில் துடித்த குழந்தையை, பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Uthankarai ,Thirupathi ,Maganurpatti, Singarapet ,Anjali ,Akash ,Nitharshini ,
× RELATED தாயப்பா ஏரியில் ரசாயன கழிவுகள் தேக்கம்