- ஆந்திரா பஸ்
- காஞ்சிபுரம்
- பொன்பாடி
- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
- ஆந்திரா
- திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்
காஞ்சிபுரம், ஜன.21: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பொன்பாடி சோதனைச்சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற ஆந்திர பேருந்தில் சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்திச் சென்ற நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த செல்வம் (46) என்பவரை கைது செய்து 15 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
