×

திருவாதூர் ஊராட்சியில் கோமாரி தடுப்பூசி முகாம்

 

மதுராந்தகம், ஜன.20: திருவாதூர் ஊராட்சியில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் திருவாதூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் கோமாரி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதி பாபு தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சுஜாதா பாரதிபாபு முன்னிலை வகித்தார். கால்நடை மருத்துவர் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமில் அந்த ஊராட்சியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை பராமரிப்பது குறித்தும், மாடுகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு பரிசோதனை செய்தும், அதற்கான தடுப்பூசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை கால்நடை மருத்துவர்கள் வழங்கினர். மேலும் மாடுகளுக்கு கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்து தீவனங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனகரத்தினம், ஜானகிராமன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvadur panchayat ,Madhurantakam ,Animal Husbandry Department ,Latur ,Chengalpattu ,
× RELATED செம்மஞ்சேரியில் உலக தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்