×

சாலையின் குறுக்கே பழுதாகி நின்ற தனியார் சொகுசு பஸ்: போக்குவரத்து பாதிப்பு

 

பெரும்புதூர், ஜன. 20: புனேவிலிருந்து தமிழகத்தை சுற்றி பார்ப்பதற்காக நேற்று 38 பேர் விமான மூலம் தமிழகம் வந்தனர். தொடர்ந்து டிராவல்ஸ் வாகனம் மூலம் மூணார், ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு காஞ்சிபுரம் செல்வதற்காக வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக அவர்கள் படப்பை வந்தனர். பின்னர் படப்பை பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் உணவருந்திவிட்டு பார்க்கிங் பகுதியில் இருந்து தனியார் பேருந்து சாலைக்கு வந்தபோது பேருந்தின் பின்பகுதி தரைதட்டி நின்றதால் நகர முடியாமல் சிக்கிக் கொண்டது.
படப்பை-வண்டலூர் மார்க்கமாக நெடுஞ்சாலையின் குறுக்கே பேருந்து சிக்கிக் கொண்டதால் வாகனங்கள் நகர முடியாமல் சுமார் ஒரு மணி நேரமாக 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பின்பக்க இன்ஜின் கொண்ட பேருந்து தனியார் உணவகத்தின் பார்க்கிங் பகுதியில் இருந்து வெளியே வரும்போது தரைதட்டி நின்ற பேருந்தை மீட்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். இதனால் இந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Tamil Nadu ,Pune ,Munnar ,Ooty ,Kodaikanal ,Kanchipuram ,Vandalur-Wallajabad ,
× RELATED செம்மஞ்சேரியில் உலக தரத்தில் ரூ.261 கோடியில் விளையாட்டு நகரம்