×

கிருஷ்ணராயபுரம் பகுதியில் சாலையோர பொம்மைகள் விற்பனை அமோகம்

கிருஷ்ணராயபுரம், ஜன.21: கிருஷ்ணராயபுரம் பகுதியில் வட மாநிலத்தவர்கள் சாலையோரம் பொம்மை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடைகள், தொழிற்சாலைகள், விவசாய தொழில்களில் ஈடுபட்ட வந்த நிலையில் தற்சமயம் வட மாநிலத்தவர்கள் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள், விவசாயப் பொருள்கள், அழகு சாதன பொருட்கள் விற்பனையில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். இதில் கிருஷ்ணராயபுரம் பகுதியில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பொம்மை விற்பனையில் வட மாநிலத்தவர்கள் ஈடுபடுகின்றனர். பொம்மை ரூ. 200 முதல் ரூ. 1000 வரை விற்பனையில் ஈடுபட்டுள்ளனர் அவர்களிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பொம்மைகள் வாங்கி செல்கிறார்கள். (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) புகழூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேலாயுதம்பாளையம், புகலூர் நடையனூர், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, மூர்த்தி பாளையம், நானப்பரப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Krishnarayapuram ,northern ,northern states ,
× RELATED கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம் 420 பேர் கைது