×

கரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த குப்பை லாரி கவிழ்ந்தது 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கரூர், ஜன. 20: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அரியலு£ர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்ட் நிறுவனத்தை நோக்கிச் சென்றது. இந்த லாரி நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா அருகே வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழந்தது. இதன் காரணமாக லாரியில் ஏற்றி வந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறியது. இதன் காரணமாக இந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது. தொடர் விடுமுறைக்கு பிறகு இந்த பகுதியின் வழியாக அனைத்து வாகனங்களும் சென்ற நிலையில், இந்த விபத்து காரணமாக நான்கு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதிச் சாலையின் வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது. தொடர்நது, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, கரூர் மாநகராட்சி அதிகாரிகள், து£ய்மை பணியாளர்கள் மூலம் வந்து பொக்லைன் உதவியுடன் குப்பைகளை அந்த இடத்தில் இருந்து அகற்றி மாநகராட்சிக்கு சொந்தனமாக வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இதன் காரணமாக இந்த பகுதியில் சில மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags : Karur ,Coimbatore Corporation ,Ariyalur district ,Thirumanilayur ,Karur Corporation ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா