×

ஜெயங்கொண்டம் அருகே கதண்டுகள் கடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஜெயங்கொண்டம், ஜன.21: ஜெயங்கொண்டம் அருகே கதண்டுகள் கடித்ததில் 3 வயது பெண் குழந்தை உள்பட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மலங்கன்குடியிருப்பு கிராமத்தில் மணக்கரை செல்லும் சாலை ஏரியின் அருகில் இறந்தவர் வீட்டுக்கு வந்த உறவினர்கள் மற்றும் அந்த ஊரைச் சார்ந்தவர்கள் ஆகியோரை கதண்டு வண்டுகள் கடித்து மயக்கமடைந்தனர். இந்நிலையில் 7 பேரையும் அருகில் இருந்தவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று வயது பெண் குழந்தை ஆதிரா, அனுசியா (40), சுப்ரமணியன் (45), அருளரசன்(34), அருண்(20), அரவிந்த் (32) ஆகியோருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கவுன்சிலர் சேகர், தீயணைப்புத் துறையினர் கதண்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : Jayankondam ,Manakkarai ,Malangukudiyiruppu village ,Ariyalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலக சிறப்பு முகாமில் 33 மனுக்கள் வந்தன