சென்னை: தமிழ்நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களை அடையாளம் கண்டு, அங்கு இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சூழல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கொடைக்கானலில் 100 ஏக்கரில் ஒரு சுற்றுலா கிராமம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார்.
