×

வேப்பனஹள்ளியில் குடியரசு தினவிழா

வேப்பனஹள்ளி, ஜன.28: குடியரசு  தினத்தை முன்னிட்டு வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முருகன்  எம்எல்ஏ, ஒன்றிய குழுத்தலைவர் சரோஜினி பரசுராமன் ஆகியோர், தேசிய கொடி ஏற்றி  வைத்து, காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர்  ரகுநாத், ஊராட்சி மன்ற தலைவர் கலீல், வபிடிஓக்கள்  அன்சர்பாஷா, சிவக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Republic Day ,Veppanahalli ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் 1089 போலீசார் பாதுகாப்பு