புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, காரில் ஒரு நாயை எடுத்து வந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிஐஎஸ்எப் இயக்குநர் ஜெனரல் பிரவீர் ரஞ்சன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்ற வளாகத்துக்குள் எந்த செல்லப் பிராணிகளும் அனுமதிக்கப்படுவதில்லை . எம்பிக்களின் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை. விதிகள் தெளிவாக உள்ள நிலையில் எம்பிக்கள் அதற்கு எந்தளவு கீழ்படிகிறார்கள் என்பது அவர்களுடைய முடிவு” என கூறினார்.
