×

விழுப்புரம் அருகே மாடு மேய்ந்த தகராறில் பிளஸ்-2 மாணவன் அடித்துக்கொலை

திருவெண்ணெய்நல்லூர்: மாடு மேய்ந்த தகராறில் பிளஸ்-2 மாணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மழையம்பட்டு, தக்கா கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (42), விவசாயி. இவர் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியின் (42) விவசாய நிலத்துக்கு அருகே மாட்டை மேய்ச்சலுக்காக நேற்று கட்டியுள்ளார். அதற்கு அவர் இங்கே மாட்டை கட்டினால் எனது வயலில் மேய்ந்து விடும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் சுப்பிரமணி, அவரது மனைவி பூபதி (36), மகன் அஜய் (20) ஆகிய மூவரும் சேர்ந்து தடியால் வீரப்பனை தாக்கியுள்ளனர்.

அப்போது, சண்டையை தடுக்க வந்த வீரப்பனின் மகன் பிளஸ் 2 மாணவன் விக்னேஷையும் (17) தடியால் மூவரும் தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்ந்த தகராறில் பிளஸ்-2 மாணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Viluppuram ,Thiruvenneynallur ,Weerappan ,Dhaka ,Thiruvenneynallur, Viluppuram district ,Subramani ,
× RELATED திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய...