×

மாணவி கூட்டு பலாத்காரம் 3 பேரிடம் குற்றப்பத்திரிகை

கோவை: கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), உறவினர் குணா என்கிற தவசி (20) ஆகியோர் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த 9ம் தேதி மகிளா கோர்ட்டில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்களிடம் 200 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Madurai ,Coimbatore airport ,Singampunari ,Sivaganga ,
× RELATED திருமணம் செய்ய மறுத்தவரை கைது செய்ய...