- பூந்தமல்லி நெடுஞ்சாலை
- திருவள்ளூர்
- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
- சென்னை
- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
- Poonthamalli
- திருவல்நகர்
திருவள்ளூர்: சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அருகே வளர்ந்திருந்த கஞ்சா செடியை பிடுங்கி சென்றனர். சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பூந்தமல்லியில் இருந்து மணவாளநகர் வழியாக திருவள்ளூர் வரை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் பொதுமக்களும் சென்றுவருகின்றனர். நேற்று முன்தினம் மணவாளநகர் ஒண்டிக்குப்பம் பகுதியில் திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போதையில் இருந்த 4 பேர் தகராறு செய்து வங்கி ஊழியர், தனியார் நிதி நிறுவன ஊழியர் ஆகியோரை கல்லால் அடித்து கொடூரமாக படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை மணவாளநகர், ஒண்டிக்குப்பம் பகுதியில் நடைபாதையோரமாக 2 பேர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அரை அடி உயரத்துக்கு கஞ்சா செடி துளிர் விட்டு வளர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவர்கள் விசாரணை நடத்திவிட்டு கஞ்சா செடியை பிடுங்கி எடுத்துச் சென்றனர்.
