சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் சில முடிவுகள் மேற்கத்திய நாடுகளில் பெரும் மந்தமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால் தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. வெள்ளி தொழில் மூலதன பொருளாக இருப்பதால் அதன் மீது முதலீடுகள் குவிந்து வருகின்றன. தங்கமும், வெள்ளியும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தை தாண்டி வெள்ளியின் விலை பெருமளவு உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,06,240க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து, ரூ.13,280க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ஒரு கிராம் ரூ.310க்கு விற்பனை விற்கப்பட்டது. 16ம் தேதி சரிவை கண்டிருந்த வெள்ளி நேற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,360 உயர்ந்து ரூ.1,07,600க்கு புதிய உச்சத்தை தொட்டது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,450க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.8 உயர்ந்து ரூ.318க்கு விற்பனையாகிறது.
