×

வடகிழக்கு பருவமழை 2 நாளில் விடைபெறும்

சென்னை: தமிழகத்தில் இதுவரை நீடித்து வந்த வட கிழக்கு பருவமழை இன்று அல்லது நாளை தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து விடை பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், குமரிக் கடல் பகுதியில் தற்போது ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இருப்பினும், தமிழகம், புதுச்சேரியில் 22ம் ேததி வரையில் வறண்ட வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. அதன்பிறகு 24ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. காலையில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் வெப்பநிலை இயல்பைவிட குறையவும் வாய்ப்புள்ளது.

Tags : Northeast Monsoon ,Chennai ,Chennai Meteorological Department ,Northeast ,Tamil Nadu ,Puducherry ,Kumari Sea ,
× RELATED பொங்கல் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்து நிற்கும் வாகனங்கள் !