சென்னை: தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பீகார் மாநிலத்தில் ‘அல்மாண்ட் கிட்’ சிரப்பில் எதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் கலப்படமானது கண்டறியப்பட்டு உள்ளது. இதை உட்கொண்டால் கடுமையான உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த மருந்தை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தடை செய்துள்ளது. எதிலீன் கிளைக்கால் என்ற நச்சு வேதிப்பொருள் சிறுநீரக செயலிழப்பு, மூளை, நுரையீரல் போன்ற வேறு உறுப்புகளையும் பாதிப்படையச் செய்து இறப்பை ஏற்படுத்தக்கூடும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் மருந்தகங்கள் இந்த மருந்தை உடனடியாக விற்பனையில் இருந்து நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தொடர்பான புகார்களுக்கு 9445865400 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
