சென்னை: துபாயில் நடந்து வரும் 24ஹெச் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இரு நாட்களுக்கு முன்பு அவரது அணியை சேர்ந்த அயர்டன் ரெடான்ட் என்பவர் ஓட்டிச்சென்ற கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபோல் அஜித்குமார் அணியின் கார்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருவதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அஜித்குமார், ‘எனக்கு ஆதரவு கொடுக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையும் மற்றும் எங்கள் அணி போடியத்தில் இருந்து பரிசு வெல்வதையும் பார்க்க முடியாததை நினைத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு சத்தியம் செய்கிறேன், உங்களுக்கு ஒரு நல்ல காலம் காத்திருக்கிறது. எங்கள் அணி கண்டிப்பாக ஒருநாள் உங்களை பெருமைப்படுத்தும்’ என்று கூறியுள்ளார். அவரது கருத்தை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
