விமானப் பாகங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்த குற்றத்திற்காக இந்தியருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

நியூயார்க்: டெல்லியை சேர்ந்த கவுசிக் என்பவர் அமெரிக்காவில் இருந்து விண்வெளிப் பொருட்கள் மற்றும் விமான பாகங்கள் மற்றும் ஏஎச்ஆர்எஸ் கருவிகளை ஓரிகனைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருக்கிறார். அந்த பொருட்களை கவுசிக் தனது இந்திய நிறுவனத்தின் பெயரில் வாங்கியிருக்கிறார். ஏஎச்ஆர் எஸ் போன்ற பாகங்கள ஏற்றுமதி செய்வதற்கு வர்த்தகத்துறையிடம் இருந்து உரிமம் தேவையாகும். ஆனால் சட்டவிரோதமாக கவுசிக் மற்றும் அவரது கூட்டாளிகள் அவற்றை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்ய இருந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அதற்கு முன்னதாக அவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் கடந்த 2024ம் ஆண்டு மியாமியில் கவுசிக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போர்ட்லாந்து நீதிமன்றம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கவுசிக்கிற்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: