உகாண்டா அதிபர் 7வது முறையாக வெற்றி

கம்பாலா: உகண்டா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் முசேவேனி தொடர்ந்து 7வது முறையாக வெற்றி பெற்றார். உகண்டாவில் கடந்த வியாழன்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. 81வயதாகும் அதிபர் யோவேரி முசெவேனி 7வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து இசைக்கலைஞராக இருந்து அரசியல்வாதியாக மாறிய போபி வைன் போட்டியிட்டார். இறுதியில் உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி 71.65 சதவீத வாக்குகளுடன் ஏழாவது முறையாக வெற்றி பெற்றார். போபி வைன் 24.72 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

Related Stories: