×

ப்ரீ மூவி ஆப்ஸ் பயன்படுத்துகிறீர்களா? உஷார்!

இணையதளத்திலோ அல்லது அங்கீகரிக்கப்படாத செயலிகளிலோ இலவசமாக படம் பார்ப்பது எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், அதற்கு பின்னால் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன. இலவச மூவி ஆப்ஸ் மற்றும் இணையதளங்கள் பெரும்பாலும் முறையான பாதுகாப்பு இல்லாதவை. நீங்கள் ஒரு படத்தை கிளிக் செய்யும்போது, அறியாமலேயே உங்கள் போனில் மால்வேர் (Malware) அல்லது ஸ்பைவேர் (Spyware) பதிவிறக்கம் ஆகலாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கேமரா, மைக்ரோபோன் மற்றும் தனிப்பட்ட கோப்புகளை திருட வாய்ப்பு உண்டு. இந்த செயலிகள் உங்கள் போனில் உள்ள வங்கி தகவல்கள், OTP செய்திகள் மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை ரகசியமாக கண்காணிக்க கூடும். இதன் விளைவாக உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படலாம்.

உங்களின் மின்னஞ்சல், பாஸ்வேர்டு, புகைப்படங்கள் மற்றும் காண்டாக்ட் விபரங்கள் திருடப்பட்டு, டார்க் வெப் எனப்படும் இணையத்தின் கருப்பு சந்தையில் விற்கப்படலாம். பதிப்புரிமை (Copyright) பெற்ற திரைப்படங்களை அனுமதியின்றி பார்ப்பது ‘பைரசி’ (Piracy) குற்றமாகும். இந்தியாவில் இதற்கென கடுமையான சட்டங்கள் உள்ளன. இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்போது, உங்கள் IP முகவரி மூலம் உங்களை கண்டறிந்து காவல்துறை அபராதம் விதிக்கவோ அல்லது கைது செய்யவோ வாய்ப்புள்ளது. இத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை தவிர்க்க அமேசான் பிரைம், நெட்பிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வமான தளங்களை மட்டும் பயன்படுத்தவும்.

* AI போட்டியில் ஆப்பிளின் மாஸ்டர் பிளான்! 2026-ல் அப்டேட்டாகும் ஐபோன்கள்…!
சக நிறுவனங்களின் செயற்கை தொழில்நுட்ப போட்டிகளை எதிர்கொள்ளும் விதமாக ஆப்பிள் ஐபோன்கள் நடப்பாண்டில் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதன் விவரம் இதோ… ஆப்பிள் நிறுவனம் தனது ‘ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்’ (Apple Intelligence) பயணத்தில் பின்னடைவை சந்தித்தாலும், 2026-ம் ஆண்டு அந்த நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபன் ஏஐ, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் 2022 மற்றும் 2023-லேயே ஏஐ துறையில் கால்பதித்துவிட்டன. ஆனால், ஆப்பிள் 2024-ல்தான் தனது ஆப்பிள் இன்டெலிஜென்ஸை அறிமுகப்படுத்தியது.

ரைட்டிங் டூல்ஸ் , கிளீன் அப் போன்ற அம்சங்கள் அறிமுகமானாலும், அவை போட்டியாளர்களின் தொழில்நுட்பத்திற்கு இணையாக இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக, புதுப்பிக்கப்பட்ட ‘சிறி’ இன்னும் முழுமை பெறவில்லை. சமீபத்திய அறிக்கைகளின்படி, 2026-ல் ஆப்பிள் ஏஐ துறையில் முன்னணி போட்டியாளராக உருவெடுக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆப்பிள் தனது சொந்த ஏஐ மாடல்களுடன் நிறுத்திவிடாமல், கூகுளின் Gemini தொழில்நுட்பத்தையும் தனது சாதனங்களில் இணைக்க உள்ளது.

இதற்காக கூகுளுடன் ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் ஏஐ டேட்டா சென்டர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவு செய்து வரும் நிலையில், ஆப்பிள் சுமார் 130 பில்லியன் டாலர் ரொக்க கையிருப்புடன் உள்ளது. இது, ஏஐ ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை விலைக்கு வாங்கவோ அல்லது பெரிய கூட்டணிகளை உருவாக்கவோ ஆப்பிளுக்கு உதவும். இதுபோன்ற காரணங்களால் ஏஐ தொழில்நுட்பத்தில் ஆப்பிள் முன்னணி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED பராசக்தி திரைப்படமும் தமிழ்நாட்டில்...