காசா அமைதி வாரியத்தில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க வௌியுறவு செயலாளர் ரூபியோ: வௌ்ளை மாளிகை அறிவிப்பு

நியூயார்க்: காசா அமைதி வாரியத்தில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, அமெரிக்க வௌியுறவு செயலாளர் ரூபியோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இஸ்ரேல், காசா இடையே தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தாலும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நீடிக்கின்றன. இருப்பினும், போருக்கு பின் காசாவை நிர்வகிப்பதற்காக காசா அமைதி வாரியம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த வாரியத்தின் தலைவராக டிரம்ப் செயல்பட உள்ளார். காசாவில் மறுகட்டமைப்பு பணிகள், நிதி மேலாண்மை உள்ளிட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்வதே வாரியத்தின் முக்கிய கடமை.

இந்த வாரியத்தின் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ள 7 உறுப்பினர்களின் பட்டியலை வௌ்ளை மாளிகை நேற்று வௌியிட்டது. அதன்படி, காசா அமைதி வாரியத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், உலக வங்கி தலைவருமான அஜய் பங்கா, அமெரிக்க வௌியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கிற்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், தனியார் பங்கு வர்த்தக நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ரோவன் மற்றும் அமெரிக்க தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories: