சியோல்: தென்கொரியாவில் கடந்த 2024ம் ஆண்டு அதிபராக இருந்த யூன் சுக் இயோல் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார். இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டு அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து முன்னாள் அதிபருக்கு எதிராக ராணுவ சட்டம் பிறப்பித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக 8 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது.
இந்நிலையில் யூன் சுக் இயோலை தடுத்து வைப்பதற்கான அதிகாரிகளின் முயற்சிகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக தென்கொரிய நீதிமன்றம் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. யூனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றம் வழங்கியுள்ள முதல் தீர்ப்பு இதுவாகும். ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதன் தொடர்பில் ஒரு கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்தியது தொடர்பாக அவருக்கு எதிரான மிக முக்கிய குற்றச்சாட்டுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்றும் கூறப்படுகின்றது.
