×

ஈரான் மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின் நாட்டுடன் வர்த்தக உறவு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் அதிரடி

மாட்ரிட்: ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி தாக்குதலை நடத்தி வருகின்றன. ஈரானை தாக்குவதற்கு தங்களின் படை தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு, ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. ஸ்பெயினில் உள்ள ரோடா, மோரோன் ராணுவ தளங்களில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தி வைத்திருந்தது. போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்கள் நாட்டின் விமான தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு ஸ்பெயின் அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து ஸ்பெயின் நாட்டுடன் வர்த்தக உறவுகளை நிறுத்த போவதாக டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறுகையில், யாரோ ஒருவரின் பழிவாங்கலுக்கு பயந்து, உலகிற்கு மோசமானதாகவும், நமது மதிப்புகள் மற்றும் நலன்களுக்கு முரணானதாக இருக்கும் எதற்கும் நாங்கள் உடந்தையாக இருக்க மாட்டோம் என்றார். ஏற்கனவே காசா மீதான இஸ்ரேல் போர் மற்றும் காசாவில் அமைதி வாரியம் ஏற்படுத்தும் முடிவுகளுக்கும் ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

Tags : US ,President ,Trump ,Spain ,Iran ,Madrid ,Israel ,Roda ,Moron ,Spain.… ,
× RELATED இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது...