ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தினவிழா

வலங்கைமான். ஜன. 27: வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் குடியரசு தின விழா ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் காந்திமதி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராசாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி ஊராட்சிமன்ற தலைவர் மோகன் பேசுகையில். ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, கடை உரிமம் கட்டணம் ஆகியவற்றை குறித்த காலத்திற்குள் செலுத்தி ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும்,சாலை ஓரங்களில் குப்பைகளை தேங்க விடாமல் சுகாதாரமாக வைத்திருக்கவும் எதிர்வரும் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஊராட்சி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரோஜாப்பு, மதுபாலா,மஞ்சுளா, ரவி, சித்ரா, கீர்த்தனா, ராணி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் குமரவேல் நன்றி கூறினார்.

Related Stories: