- ஒட்டன்சத்திரம் பெரியகோட்டை
- ஒட்டன்சத்திரம்
- அமைச்சர்
- ஏ.சக்ரபரணி
- தமிழ்நாடு அரசு
- பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி
- எம்எல்ஏ...
ஒட்டன்சத்திரம், ஜன. 14: ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின் பேரில் தமிழக அரசின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏ காளியப்பன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி செல்வி, தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியர் செல்வராஜ், முன்னாள் ஆசிரியர் முத்தப்பன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
