- சமத்துவ பொங்கல் விழா
- ராமபுரம் பிரைமரி ஹெல்த்
- ரெட்டியார்சத்திரம்
- ரெட்டியார்சத்திரம் ஒன்றியம்
- அரசு ஆரம்ப சுகாதார மையம்
ரெட்டியார்சத்திரம், ஜன. 14: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் ராமாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக நுழைவு வாயிலில் வண்ண கோலமிட்டும், தோரணங்கள் அமைத்தும் அலங்கரித்தனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மருத்துவர் வைஷ்ணவி, கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செவிலியர்கள் எபினேஸ் மேரி, காவியா, சுகாதார செவிலியர்கள் அன்னலட்சுமி, லட்சுமி, ஜெய, சுதா, மருந்தாளுநர் முத்துபிரபா, எஎன்எம் செவிலியர் சித்ரா, தொற்றா நோய் செவிலியர்கள் சந்தன மேரிஜாய்ஸ், கிருஷ்ணவேணி, சத்யா, லேப் டெக்னீசியன் பிரபு, மருத்துவ பணியாளர் சபரிநாதன் மற்றும் சித்த மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டனர்.
