திருவனந்தபுரம்: தைப்பொங்கலை முன்னிட்டு கேரளாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் மாவட்டங்களில் அரசு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாகும். கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில வருடங்களாக பொங்கலுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வருடமும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
