புதுடெல்லி: முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டின் துணை ஜனாதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் ஜெகதீப் தன்கர்(74). இவர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென உடல்நலத்தை காரணம் காட்டி ஜூலை 21ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு தன்கர் எங்கிருக்கிறார் என்ற எந்த தகவல்களும் வௌியாகவில்லை.
இந்நிலையில் ஜெகதீப் தன்கர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு கழிவறைக்கு சென்ற தன்கர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்ஐஆர் ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரை இரண்டு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
