×

திமுக சார்பில் விருப்ப மனு

மொடக்குறிச்சி, மார்ச் 4: வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் போட்டியிடுவதற்காக மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு.குணசேகரன் சென்னையில் உள்ள அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். அப்போது, சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார்,

பேரூர் கழக செயலாளர்கள் அவல்பூந்துறை சாமியப்பன் (எ) சண்முகசுந்தரம், அரச்சலூர் கோவிந்தசாமி, சென்னசமுத்திரம் உலகநாதன், வெங்கம்பூர் செந்தில்குமார், சென்னிமலை வடக்கு ஒன்றிய துணை செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தனசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : DMK ,Modakurichi ,Modakurichi West Union ,Su. Gunasekaran ,Arivalayam ,Chennai ,Modakurichi Assembly ,2026 Assembly elections ,Chennimalai North Union ,Secretary… ,
× RELATED இரை தேடி வந்த புறாக்கள் சந்திர...