- அயகரன்புலம் பள்ளி
- வேதாரண்யம்
- ஆயக்காரன்புலம் RVS மேல்நிலைப் பள்ளி
- வேதாரண்யம் தாலுகா
- நாகப்பட்டினம் மாவட்டம்
- சுவாமிநாதன்
- பெற்றோர் ஆசிரியர் சங்கம்
- ஜனாதிபதி
- பாலு
- Jayapal
வேதாரண்யம், ஜன. 9: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் ஆர்.வி.எஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலு, பள்ளி முதல்வர் ஜெயபால், துணை முதல்வர் லதா, நிர்வாக அலுவலர் ராஜசிங்கம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேதாரண்யம் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திருமலை செந்தில், பிரியம் அறக்கட்டளை இயக்குநர் சிவக்குமார், வழக்கறிஞர்ராமஜெயம்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராம்குமார், மதியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் மாணவர்கள் சார்பில் 270 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டது.
