×

தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.400 குறைந்தது: வெள்ளியும் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.400 குறைந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு 5 ஆயிரம் சரிந்தது. தங்கம் விலை கடந்த ஆண்டில் விலை ஏற்றம் என்பது அதிரடியாக இருந்தது. கடந்த ஆண்டு சுமார் 52 முறை புதிய உச்சங்களை தங்கம் விலை எட்டியது. இதன் ஒரு பகுதியாக யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800 என்ற வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. இது நகை வாங்கும் நடுத்தர இல்லத்தரசிகளை கடுமைாக அதிர்ச்சி அடைய செய்து வந்தது. அதன் பிறகு தங்கத்தின் விலை தினமும் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,870க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையானது. மாலையில் திடீரென தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,02,000க்கும் விற்றது. இதே போல வெள்ளி விலையும் நேற்று குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.272க்கும், கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

Tags : Chennai ,
× RELATED சென்னையில் தங்கம் விலை உயர்வு..சவரன் ரூ.1,02,400க்கு விற்பனை..!!