சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விலை உயர்வு ஏற்பட்டு வருவதால், சுபநிகழ்ச்சிகள், திருமணங்களுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்வை கண்டு வருகிறது. உலகளாவிய பொருளாதார நிலவரங்கள், டாலர் மதிப்பு மாற்றம் போன்றவை தங்கம் விலையை பாதித்து வருகின்றன. இந்நிலையில் இன்று காலை ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்வு கண்டுள்ளது.
நேற்று ரூ.1,02,000க்கு ஒரு சவரன் தங்கம் விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1,02,400 ஆக ஆபரணத்தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.268க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை இன்று சற்று குறைவு கண்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,68,000க்கு விற்பனையாகிறது.
