×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 605 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: இந்திய ஏற்றுமதி மீது மேலும் 500% வரி விதிக்க அமெரிக்கா சட்டம் கொண்டுவர உள்ள நிலையில் பங்குச்சந்தை குறியீட்டு எண் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன. வர்த்தக நேரம் முடியும் முன் சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிந்து 83,402 புள்ளிகளுக்குச் சென்று சற்று மீண்டு முடிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 605 புள்ளிகள் சரிந்து 83,576 புள்ளிகளானது.

என்.டி.பி.சி. ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் தலா 2%, அதானி போர்ட்ஸ், பார்த்தி ஏர்டெல் பங்குகள் தலா 1.9% விலை குறைந்தன. சன் பார்மா, இண்டிகோ, பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டைட்டன். ஐ.டி.சி.. மாருதி சுசூகி பங்குகள் விலை குறைந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்.சி.எல்.டெக், பி.இ.எல்., ரிலையன்ஸ், எட்டர்னல். எஸ்.பி.ஐ. பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 194 புள்ளிகள் வீழ்ந்து 25,683 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Tags : Mumbai ,Sensex ,INDEX ,UNITED ,STATES ,
× RELATED ஜன.10: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!