- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்
- சீர்காழி
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
- சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்
- மாவட்ட துணைத் தலைவர்
- அன்பரசன்
- மண்டல தலைவர்
- தனராஜ்
- பிராந்திய செயலாளர்
- சாமி தாஸ்
- பஞ்சாயத்து…
சீர்காழி, ஜன.8: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க சீர்காழி வட்டாரக் கிளை செயற்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன் தலைமையில், வட்டாரத் தலைவர் தனராஜ், வட்டார செயலாளர் சாமி தாஸ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் பொருந்துமா என்கிற விளக்கம் மாவட்ட நிர்வாகம் தெளிவுரை வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை வழங்கி கருவூலம் மூலமாக ஊதியம் கிடைத்திடவும், தமிழ்நாடு அரசு புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்த்து ஓய்வூதியம் ஊராட்சி செயலாளர்களுக்கு கிடைக்க ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் மாவட்ட நிர்வாகம் மாநில மையத்திற்கு தெரிவித்து சீர்காழி வட்டக் கிளை செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அசோக்குமார், குமரேஷ், தமிழ்ச்செல்வன், பாத்திமா, ஊராட்சி செயலாளர்கள் கார்த்திக், சந்தோஷ், சுதன், பக்கிரிசாமி, சீனிவாசன், ராமச்சந்திரன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
