மயிலாடுதுறை, ஜன.8: மயிலாடுதுறை எம்பி சுதா தனது தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நாலுகால்மண்டபம் அருகே ஈம சடங்கு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். மயிலாடுதுறை 6வது வார்டுக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் அருகில்மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் ஈம சடங்கு மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர மன்ற உறுப்பினர் ரிஷி தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா கலந்து கொண்டு ஈம மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர் மன்ற துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
