- நாகப்பட்டினம்
- தமிழ்நாடு அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம்
- நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம்
நாகப்பட்டினம், ஜன. 7: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் போலீசார், மாவட்டத் தலைவர் கவிதா உள்ளிட்ட 100 பெண்களை கைது செய்தனர்.
