×

இசையும், இசையும் சேலத்தில் ஒரு திருவையாறு

சேலம், ஜன.3: தென் இந்தியாவிலேயே, பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்களை மட்டுமே கொண்ட சேலத்தின் முதல் பண்பலை சூரியன் பண்பலை, தன் ரசிகர்களை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த மார்கழியில் இசையை கொண்டாடும் விதத்தில், தொடர்ந்து 5வது வருடமாக சூரியன் பண்பலை சார்பில், சேலம் மாமாங்கத்தில் உள்ள செந்தில் பப்ளிக் பள்ளியில் இன்று(3ம் தேதி) இசையும், இசையும் சேலத்தில் ஒரு திருவையாறு சீசன் 5 நடத்த உள்ளது. மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் சுமதி ஸ்ரீயின் சொற்பொழிவும், தொடர்ந்து 7 மணிக்கு பிரியா சகோதரிகள்(Priya Sister’s) வாய்ப்பாட்டு இடம்பெறுகிறது. அனுமதி இலவசம். அனைவரும் மாலை 4.30 மணி முதலே அரங்கத்தில் அனுமதிக்கப்படுவர். இசையும் இசையும் சேலத்தில் ஒரு திருவையாறு சீசன் 5 சூரியன் பண்பலையோடு இந்நிகழ்ச்சியை ஏன்எஸ் திவ்யம் ஜூவல்ஸ், ஆனுஜ் டைல்ஸ்-ன் அரவிந்த் கணேஷ் செராமிக்ஸ், ஊர்வசி மேட்சிங் சென்டர், எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ்- கேக்ஸ், ஸ்ரீ ஏழுமலையான் அலுமினியம்- கிளாஸ் ஹவுஸ், மெட்ரோ பைப்ஸ் -பிட்டிங், SISU மருத்துவமனை, விநாயகா மிஷன் ஸ்கூல் ஆப் அலைட் ஹெல்த் சயின்ஸ் இணைந்து வழங்குகின்றனர். …

Tags : Salem ,Suryan Panpali ,
× RELATED முன்விரோத தகராறில் தாக்கிய வாலிபர் கைது