×

நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது காட்பாடி பகுதியில்

 

வேலூர், ஜன.6: காட்பாடி பகுதியில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார். காட்பாடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு சுமார் 12 மணியளவில் மிஷின் காம்பவுண்ட் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும்படி போதையில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் சுற்றிக் கொண்டிருந்தார்.
அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அவர் பல்வேறு திருட்டு, வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய காட்பாடி அசோக் நகர் விடிகே நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரனை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Katpadi ,Vellore ,Katpadi Police ,Manikandan ,Kumar ,
× RELATED சொந்த தொழில் வைத்து தருவதாக பலரிடம்...