பேரணாம்பட்டு,ஜன.5: பேரணாம்பட்டு அருகே கள்ளச்சந்தையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.பேரணாம்பட்டு அடுத்த ஜே.ஜே.நகர் பகுதியில் கள்ளச்சந்தையில் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்யூ மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கலைவாணி(65) என்பவரின் வீட்டினை போலீசார் சோதனை செய்த போது வீட்டின் பின்புறம் சுமார் 44 கர்நாடக மது பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்ததில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வந்து கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்க வைத்திருந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து வழக்குப்பதிந்து கலைவாணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
