எவரெஸ்ட் பள்ளி சார்பில் கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணி

கடையநல்லூர், ஜன.26:  11வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கடையநல்லூரில் எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வருவாய்த் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் முன் நடந்த துவக்க விழாவுக்குத் தலைமை வகித்த தாசில்தார் பாலசுப்பிரமணியன், பேரணியைத் துவக்கிவைத்தார். நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சாகுல்ஹமீது, விஏஓ சாந்தி, தாலுகா அலுவலக தேர்தல்  பிரிவு ஊழியர்கள், வருவாய்த்துறையினர், நகராட்சி பணியாளர்கள், எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என அனைத்துத்தரப்பினரும் திரளாகப் பங்கேற்றனர்.  இதையொட்டி நகரின் முக்கிய வீதிகளில் மாணவ, மாணவிகள் துண்டுபிரசுரம் வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எவரெஸ்ட் கல்விக்குழுமங்களின் சேர்மன் டாக்டர் முகைதீன் அப்துல்காதர் நன்றி கூறினார்.

Related Stories: