சென்னை: இஸ்ரோ தேர்வை பொங்கல் திருநாளன்று நடத்துவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜனவரி 15 பொங்கலன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ தேர்வின் தேதியை மாற்றக் கோரி ஒன்றிய அமைச்சருக்கும் இஸ்ரோ தலைவருக்கும் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். பொங்கல் பண்டிகை சமயத்தில் பேருந்து, ரயில் போக்குவரத்து மிகவும் நெரிசலாக இருக்கும் என தெரிவித்தார்.
